ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு!
கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 110 படை ஆளுனர் காலிப்பணியிடங்கள் உள்ளது.ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஊர்க்காவல்படை அலுவலகம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து 21.12.2023 முதல் 25.12.2023 வர இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியில் 31.12.2023-ம் தேதி மாலைக்குள் சேர்க்குமாறும் இதற்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பணியில் சேர தகுதி மற்றும் விபரம் கீழ்கண்டவாறு கொடுக்கபட்டுள்ளது. 1)விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 31.12.2023 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 50 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்கவேண்டும். 2) நல்ல உடல் தகுதியுடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். 3)விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். 4) பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான TC அல்லது மதிப்பெண் பட்டியல் நகல்,ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். 5)விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 6)விண்ணப்பதாரர்கள் இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணி புரிபவர்களாகவும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். 7)விண்ணப்பதாரர்கள் ஊர்க்காவல் படையில் குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். 8)விண்ணப்பதாரர்கள் மத்திய/மாநில அரசு ஊழியராகவோ சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும் என அறிக்கையில் கொடுக்கபட்டுள்ளது.
Tags
Next Story