பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற அழைப்பு

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற அழைப்பு

மாவட்ட ஆட்சியர் 

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு (PMMSY) திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் நாகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு (PMMSY) திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தகவல் தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும்,

உள்நாட்டு மீன்வளர்ப்பினை ஊக்குவித்திடவும், மீன் உற்பத்தியினை பெருக்கிடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் கீழ்கண்டுள்ள திட்டங்கள் மானிய உதவியில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவரம் பின்வருமாறு. 50 டன் திறனுள்ள பனிக்கட்டி நிலையம் அமைத்திட மொத்த தொகை ரூ.150.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.60.00 இலட்சம் மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.90.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. • உவர்நீர் மீன் (கொடுவா மீன்) வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.14.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.5.60 இலட்சம் மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.8.40 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

உயிர் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 01 அலகின் மொத்த செலவினம் ரூ.18.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.7.20 இலட்சம் மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.10.80 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்வதற்கு 01 அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.7.50 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.3.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டும் திட்டத்தில் 01 படகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.120.00 இலட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியம் ரூ.48.00 இலட்சம் மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.72.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. எனவே மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகப்பட்டினம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி திட்டங்களில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களில் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்

Tags

Next Story