சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து ஐ.பி.செந்தில்குமார் பிரசாரம்

சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து ஐ.பி.செந்தில்குமார் பிரசாரம்


ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ பிரசாரம்

கொடைக்கானல் பெருமாள்மலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்ததை ஆதரித்து ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார், இதனையடுத்து கொடைக்கானல் பெருமாள் பிரிவு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்ததை ஆதிரத்து பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பழனி சட்ட மன்ற உறுப்பினர் பேசிய போது, இப்பகுதிக்கு சாலை வசதி,கழிப்பறை வசதி,குடி நீர் ஆதாரமாக உள்ள சீராடுகானல் பகுதியில் உள்ள பைப்புகள் காட்டு எரிந்து சேதமாகியுள்ளது,விரைவில் சீரமைக்கப்படும் என்றும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் தெரிவித்தார், மேலும் சாலை,ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகள் செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்,மேலும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் 100 வேலை திட்டம் ரத்தாகும் என்றும் சிஏஏ திட்டம் இந்த மோடி அரசு அமுல் படுத்தியதாகவும் தெரிவித்தார்,

இதனையடுத்து வேட்பாளர் சச்சிதானந்தம் பேசிய போது மூணார் சாலை விரைவில் திறக்கப்பட்டு காய்கறிகள் கொண்டு செல்ல வழிவகை செய்யப்படும் என்றும், மன்னவனூரில் பண்முனை ஆராய்ச்சி நிலையம் திறக்கப்படும் என்றும் சுற்றுலா வளர்ச்சி மட்டுமில்லாமல் விவசாய வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்றும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவேன் என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவேன் என்றும் வாக்கு சேகரித்தார்.முன்னதாக இப்பகுதியினர் ஆரத்தி எடுத்து மலர் தூவி வேட்பாளரையும்,பழனி சட்ட மன்ற உறுப்பினரை சிறப்பாக வரவேற்றனர், இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story