நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.
X

நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8,000 மரக்கன்றுகள் நடும் பணி இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8,000 மரக்கன்றுகள் நடும் பணி இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சி, கொழிஞ்சிப்பட்டி ஏரிக்கரையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சாலையோரம் உள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஒரு மரம் அகற்றப்பட்டதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து இன்றையதினம் தேசிய நெடுஞ்சாலைத்துறை முசிறி நாமக்கல் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. அதில் ஒரு பகுதியாக இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சி, கொழிஞ்சிப்பட்டி ஏரிக்கரையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்றையதினம் வேம்பு, புங்கன், பூவரசு, நாவல் மற்றும் புளியன் உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கா.நடராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி கோட்ட பொறியாளர் (நாமக்கல்) எ.என்.அசோக்குமார், செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.இராஜேஸ்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story