இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு ஆயத்தப் பயிற்சி முகாம்:

இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு ஆயத்தப் பயிற்சி முகாம்:

சாரணர், சாரணீயர்களுக்கு மாநில அளவில் மேதகு ஆளுனர் அவர்களால் வழங்கப்படும் உயரிய விருதான இராஜ்யபுரஸ்கார் விருதுத் தேர்வு முகாமில் பங்கேற்கவுள்ள சாரண சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி முகாம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் 31.07.2024 முதல் 01.08.2024 வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரணர், சாரணீயர்கள் 650 பேர் இம்முகாமில் கலந்து கொண்டனர். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் சாரண இயக்க மாவட்டத்துணைத்தலைவருமான ர.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் முகாம் செயலர் து.விஜய் வரவேற்புரை ஆற்றினார். கல்வி நிறுவன இயக்குனர் முனைவர். V.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி, வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் மாவட்ட திரிசாரண ஆணையருமான முனைவர் டி. ஓ. சிங்காரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முகாமினைத் துவக்கி வைத்தனர்.

முகாமினைத் தேசியத்தலைமையகப் பாடத்திட்டத்தின் படி பீட்டர் ஆரோக்யசாமி, பாலசுப்ரமணியம், திரு.விஜயகுமார், திலகவதி, ஆர்.கவிதா, ப.ஜெயந்தி, தேன்மொழி ஆகியோர் அடங்கிய குழு முகாமினைச் சிறப்பாக நடத்தியது. முகாமில் அணிமுறை, முதலுதவி, ஆக்கல் கலை, நிலப்படம், மதிப்பீடு உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர். இரமேஷ் தலைமையிலான இன்னிசைக்குழுவைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் சாரண இயக்க மாணவர்களுக்காக இன்னிசை விருந்தளித்தனர். இராசிபுரம் கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் தலைவரும் நாமக்கல் மாவட்ட சாரண இயக்கத்தின் தலைவருமான க. சிதம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற் ற முகாமின் நிறைவு விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் விஜயன் (பொ )(இடைநிலை) அ.பாலசுப்ரமணியம் (தொடக்கக்கல்வி) மரகதம் (தனியார் பள்ளிகள்)(பொ), மாவட்ட துணைத் தலைவர் தி.ம. சிவ சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிறுவன இயக்குனர் முனைவர் வி.மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாம் செயல்பாடுகளைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்புப் பதாகைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. மாவட்டத்தலைவர் முனைவர். குணசேகரன், ஆணையர்கள் முனைவர்.தில்லைக்குமார், முனைவர்.சித்ராமோகன், முனைவர். வெற்றிச்செல்வன், முனைவர்.சாரதாமணி, சண்முகசுந்தரம், கே.எஸ்.பழனியப்பன், சீ.இரகோத்தமன் ஆகியோர் விருதுத் தேர்வு முகாமில் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனைகள் பல படைக்க வேண்டும் என வாழ்த்தினர். மாவட்ட அமைப்பு ஆணையர் இரா.சடையம்மாள் நன்றி கூறினார். முனைவர். லோகநாதன், தட்சினாமூர்த்தி, சத்தார்பாஷா, சு.கோபி, வி.தீபக், மு.குமார், நாகராஜன், சி.மணியரசன் ஆகியோர் அடங்கிய குழு முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தது.

Tags

Next Story