இரணியல்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் என்ஜினீயர் சடலம் மீட்பு

இரணியல்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் என்ஜினீயர் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய சஜன் ஜோசப்
இரணியல் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த இன்ஜினியரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகேயுள்ள காரவிளையை சேர்ந்தவர் ஜோசப் மகன் சஜின் ஜோசப் (34). பிஇ பட்டதாரி. இவரது மனைவி அனுஷா (29) இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள், 6 மாத மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த சஜன் ஜோசப் தற்போது ஊரில் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஜன் ஜோசப் குடும்பத்துடன் இரணியல் அருகே உள்ள காரங்காடு கிழக்கு தெருவில் வாடகைக்கு குடியமர்ந்தார்.

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அனுஷா தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். சஜன் ஜோஸ் மட்டும் காரங்காட்டில் உள்ள வாடகை வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சஜன் ஜோசப் சேலையால் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story