காங்கேயத்தில் காற்றில் சாலையில் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்

காங்கேயத்தில் காற்றில் சாலையில் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்

சாலையில் சாய்ந்துள்ள தடுப்புகள்

காங்கேயத்தில் காற்றில் சாலையில் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடைகாலம்‌ முடிவடைந்த நிலையில் காற்று அதிக வீசும் காலம் என்பதால் அளவுக்கு அதிகமான காற்றை விட அதிகமான காற்று வீசுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் அளவுக்கு அதிகமான காற்று வீசியதில் சாலைகளில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோர் வைத்திருந்த,

சாலை இரும்பு தடுப்புகள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களின் குறுக்கே விழுந்துள்ள சாலை தடுப்புகளால் மேலும் போக்குவரத்து நெரிசல்களும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது போன்று சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் சாலை இரும்பு தடுப்புகளை முறையாக பயன்படும் படி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story