மத்திய அரிமா சங்கத்தின் முயற்சியால் இரும்பு டிவைடர் அமைப்பு

மத்திய அரிமா சங்கத்தின் முயற்சியால் இரும்பு டிவைடர் அமைப்பு

 பள்ளிபாளையம் சங்ககிரி சாலை வெடியரசம்பாளையத்தில் விபத்து அடிக்கடி நடக்கும் நிலையில், அரிமா சங்கம் சார்பில் இரும்பு டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது.  

பள்ளிபாளையம் சங்ககிரி சாலை வெடியரசம்பாளையத்தில் விபத்து அடிக்கடி நடக்கும் நிலையில், அரிமா சங்கம் சார்பில் இரும்பு டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலை வெடியரசம்பாளையம் பகுதியில், அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால், அங்கு வேகத்தடை அல்லது இரும்பு டிவைடர் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் இது குறித்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஞ்சாயத்து தலைவர்,வசந்தி வெங்கடாசலம், துணைத் தலைவர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.மேலும் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால், தற்காலிகமாக இரண்டு இரும்பு டிவைடர்கள் பள்ளிபாளையம் போலீசார் உதவியுடன் விபத்து அதிகம் நடைபெறும் பகுதியில் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கத்தின் சொந்த ஏற்பாட்டில், புதிதாக இரண்டு இரும்பு டிவைடர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் மத்திய அரிமா சங்கத் தலைவர் ஏகே பழனியப்பன், எஸ்.கிருஷ்ணன், பி.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர், பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில் வேல் முன்னிலையில் இரண்டு இரும்பு டிவைடர்களை ஒப்படைத்தனர். அது விபத்து அதிகம் நடைபெறும் வெடியரசம்பாளையம் மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் என்ற பகுதியில் வைக்கப்பட்டது. அரிமா சங்கத்தின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story