இரும்புக் குழாய்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பைல் படம்
தூத்துக்குடியில் பாலம் அமைக்கும் பணிக்காக வைத்திருந்த 12 இரும்புக் குழாய்களைத் திருடிய மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி துறைமுக விரைவு சாலையோரம் தனியாா் கட்டுமான நிறுவனம் மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்தவற்றில் 12 இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன மேலாளா் முத்துக்குமாா் தொ்மல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, குழாய்களைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.
Next Story