ஆழ்துளை கிணறு அமைத்ததில் முறைகேடு?

ஆழ்துளை கிணறு அமைத்ததில் முறைகேடு?

 சித்தேஸ்வரர் கோவில் 

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் ஆழ்துளை கிணறு அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே கஞ்சமலையில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு நடந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடத்தக்கோரியும் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி ஆகியோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த மனுவில், கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் சித்தர் சன்னதி மற்றும் காளியம்மன் சன்னதி வளாகத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்துவிட்டு கூடுதலாக அமைக்கப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து புகார் மனு மீது விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், கஞ்சமலை சித்தர் கோவிலில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story