தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு : கல்லூரி இணைப் பேராசிரியர் கைது....

தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு : கல்லூரி இணைப் பேராசிரியர் கைது....

பணியிடை நீக்கம் 

ஆந்திராவில் தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில், ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி இணைப்பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆந்திராவில் தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில், ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி இணைப்பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றியவர் எஸ்.ராஜசவுந்தர்ராஜன்(59). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் கல்வியியல் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய கல்வியியல் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக சென்றிருந்தார்.

ஆனால், முறையாக கட்டமைப்புகளை ஆய்வு செய்யாமல், கல்வியியல் கல்லூரி தொடங்க அதற்கான அனுமதியை வழங்க ராஜசவுந்தராஜன் அதற்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆந்திராவில் உள்ளவர்கள் சிபிஐக்கு புகார் அனுப்பினர்.

புகாரினை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு, போலியான சான்றிதழ்களை வழங்கிய இணைப் பேராசிரியர் ராஜசவுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம், போலியான சான்றிதழ் வழங்கிய ராஜசவுந்தர்ராஜனை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளதாக, தஞ்சாவூர் கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story