கூத்தைப்பார் பேரூராட்சியில் முறைகேடு: திருச்சி கலெக்டரிடம் புகார்

கூத்தைப்பார் பேரூராட்சியில் முறைகேடு: திருச்சி கலெக்டரிடம் புகார்

மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பு

கூத்தைப்பார் பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக திருச்சி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் 11 வார்டுகளையும், மீதமுள்ள 7 வார்டுகளை பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன.

இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் அந்த பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் பெரியசாமி என்பவர் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:கூத்தைப்பார் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2022-2023 தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்தது பற்றி செயல் அலுவலரிடம் புகார் செய்தேன்.

ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி 2 பேர் என் வீட்டுக்கு வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் மிரட்டி விட்டு சென்றனர். கூத்தைப்பார் பேரூராட்சியில் சுய உதவி குழு என்ற பெயரில்ஆண்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றார்கள்.

இவர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை கொடுத்தார்கள் அவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் தெரியவில்லை. பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டும் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.

சாக்கடை கால்வாய்கள் இடிந்து கிடக்கிறது. இதுபற்றி 4வது வார்டு கவுன்சிலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் பம்புகள் பராமரிப்பு, குழாய்கள் மாற்றுவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story