காஞ்சியில் நீர்பாசன சட்ட திருத்த கருத்துக்கேட்பு கூட்டம்

காஞ்சியில் நீர்பாசன சட்ட திருத்த கருத்துக்கேட்பு கூட்டம்

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

காஞ்சியில் 9 மாவட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தமிழக நீர்வளத் துறையில், விவசாயிகளுக்கான தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் வாயிலாக, ஏரிநீரை முறையாக பயன்படுத்துவதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டம் வாயிலாக, விவசாயிகள் தங்களுடைய பாசன அமைப்புகளை பராமரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் ஜனநாயக முறையில் நீர்ப்பாசன சங்கத்தை நிர்வகிக்கின்றனர். இதன் வாயிலாக, ஏரிநீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்து பயன்படுத்தவும், ஏரி பராமரிக்கப்படுவது போன்றவை விவசாயிகளே நேரடியாக கண்காணிக்கின்றனர்.

இச்சட்டத்திலும், விதிமுறைகளிலும் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, சென்னை மண்டலத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலுார் உட்பட 9 மாவட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள காவலர் கூட்டரங்கில், தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது, நீர்ப்பாசனஅமைப்பு முறை மேலாண்மை சட்டம் பற்றியும், பல்வேறு விதிமுறைகள் குறித்தும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் விரிவாக கூறினர். விவசாயிகளிடம் கருத்துக்களும் கேட்கப்பட்டதில் பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தனர். இதில், நீர்வளத்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story