பாசன வாய்க்கால்கள் தூர்வாறும் பணிகள் துவக்கம்
தூர்வாரும் பணி
நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மூலம் கடம்பாகுளம் பாசன வாய்க்கால்கள் மடை எண் 4,6,7,8,9 ஆகியவற்றை தூர்வாரும் பணி துவங்கியது. இந்நிகழ்விற்கு கடம்பாகுளம் நீரினைப் பயன்படுத்து வோர் சங்கத் தலைவர் டி. டி. குணா தலைமை வகித்தார். புறையூர் தம்பிரான், குருகாட்டூர் யோசுவா, மேல கடம்பா சுதா, மணத்தி பாஸ்கரன், குட்டித்தோட்டம் நடராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சகோ.கிளமென்ட் எபனேசர் ஜெபம் செய்துதூர் வாரும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், முத்து, மாசானமுத்து, மூக்காண்டி, சமுத்திரம், பரமசிவன், அண்ணாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். பாசன வாய்க்கால்கள் 17 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படுகிறது. 1500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றது. புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, குருகாட்டூர், மேலக்கடம்பா, ராஜாங்கபுரம், கோட்டூர், குட்டக்கரை ஆகிய கிராமங்கள் இதன் மூலம் பயன்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.