நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை - வேளாண்மை துணை இயக்குநர்  ஆய்வு 

நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை - வேளாண்மை துணை  இயக்குநர்  ஆய்வு 
வேளாண் அலுவலர்கள் ஆய்வு
பேராவூரணி வட்டாரத்தில் சம்பா தாளடி நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தல் 5,166 எக்டர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,250 எக்டர் பரப்பளவில் ஆற்று நீர் பாசனம் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னவாசல், சித்தாதிக்காடு, களத்தூர் மேற்கு, சூரியநாராயணபுரம் பகுதியில் ஆற்று நீர்ப் பாசனம் பெற்று வந்த நிலையில் சுமார் 750 ஏக்கர் நெல்பயிர்கள் பால்பிடிக்கும் மற்றும் முதிர்ச்சியடையும் நிலையில் இருந்து வருகிறது.

இப்பகுதியில் பாசன நீர் மேலாண்மை மற்றும அறுவடை வரை பயிர்களை காப்பாற்றி கொண்டு வருவது குறித்த வழிமுறைகளை வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) சுஜாதா தலைமையில், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் அருண்குமார், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் வள்ளியம்மாள், வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் செங்கோல், காதர் ஒலி அடங்கிய இக்குழுவினர் மேற்படி கிராமங்களில் பாசன நீர் மேலாண்மை முறைகள் குறித்தும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்பொழுது பால்பிடிக்கும் மற்றும் முதிர்ச்சி அடையும் தருணத்தில் உள்ள நெற்பயிரில் உரிய பாசன மேலாண்மை முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சராசரியான மகசூல் எடுக்க இயலும். இதன் அடிப்படையில் தற்பொழுது நிலவி வரும் வறண்ட வானிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு சதவீத பிபிஎப்எம் நுணணுயிர் கலவை அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் பயிர்கள் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சி பேணப்பட்டு அறுவடை நிலைக்கு கொண்டு சென்று சராசரியான மகசூல் அடைய முடியும் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர். ..

Tags

Next Story