இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 108 திருவிளக்கு பூஜை

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பௌர்ணமி தினத்தை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வழங்குகிறது இக்கோவிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி கன்னியாகுமரி சங்கரன்கோவில் தென்காசி கடையநல்லூர் அருப்புக்கோட்டை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வேண்டி விரதமருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது பங்குனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இக்கோவிலில் 108 திருவிழாக்கு பூஜை நடைபெற்றது அதற்கு முன்னதாக அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் குங்குமம் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விளக்கு பூஜையில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 108 பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் பாடல்கள் பாடி குலவையிட்டு விளக்கு பூஜையில் ஈடுபட்டனர். விளக்கு பூஜையின் போது பாடப்பட்ட அம்மன் பாடலுக்கு பெண்கள் குலதையிட்டு அருள் வந்து ஆடும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் இலவச விளக்கு மற்றும் சேலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன.

Next Story