இருளர் குடும்பங்கள் வீடு இல்லாமல் தவிக்கும் அவலம்

இருளர் குடும்பங்கள் வீடு இல்லாமல் தவிக்கும் அவலம்

முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

30-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வீடு இல்லாமல் தவிக்கும் அவலம்.
திருவண்ணாமலை செங்கல் சூலையில் கொத்தடிமையாக இருந்த 30க்கும் மேற்பட்டஇருளர் ஜாதியின மக்களை அரசாங்கம் மீட்டெடுக்கப்பட்டது பின்னர் இவர்களை பெரும்பாக்கம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் தற்காலிகமாக குடியிருப்பு வைக்கப்பட்டது. மேலும் இவர்கள் வசித்து வரும் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள ஏரி கரையில் தண்ணீரைக் குடித்து வருவதனால் பல நோய்கள் ஏற்பட்டு வருகின்றது எனவும். குடியிருப்பு வீடு இல்லாததால். கீத்து கொட்டகையில் வசித்து வருவதால் கொசுக்கடிகளும் மற்றும் பாம்பு. தேள் உள்ளிட்ட விஷக்கடிகள் கடித்து பல பேர் உயிரிழந்த உள்ளதாகவும் மற்றும் குழந்தைகள் வைத்துள்ளதால் எங்களுக்கு பயமாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்த இருளர் இன மக்கள். குடியிருப்பு வீடு இல்லாததால் நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களால் தினந்தோறும் உயிர் பாதுகாப்பு இல்லாமல் பயத்தில் வாழ்ந்து கொண்டு வரும் நிலை ஏற்பட்டு வருகின்றது. என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது..... மேலும் வட்டாட்சியர் அலுவலர் சரளா நேரில் அவர்களே சந்தித்து விசாரித்தார் அப்பொழுது அவர்கள் எங்களுக்கு செங்கல் சூலையில் கொத்தடிமையாக மீட்டெடுத்த அரசாங்கம் எங்களின் வாழ்வாதாரத்திற்கு வாழ்வுரிமை வழங்கவில்லை மேலும் நாங்கள் வசிப்பதற்கு குடியிருப்பு விடும் மற்றும் குடிப்பதற்கு நல்ல குடிநீரும் மேலும் ஜாதி சான்றிதழ். உள்ளிட்ட அரசாங்கத்தினுடைய அடையாளங்கள் அனைத்தும் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் நேரில் நாங்கள் உங்களை நேரில் ஆய்வு செய்து உடனடியாக இடமாற்றம் செய்து உங்களுக்கு குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட அரசாங்கத்தினுடைய அனைத்தும் சலுகைகளும் செய்து கொடுக்கிறோம் என இவ்வாறு தெரிவித்ததால் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தினை தற்காலிகமாக கைவிடப்பட்டனர்.

Tags

Next Story