வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா? கேள்விகளுடன் தாமரையே விடை: போஸ்டர்

வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா? கேள்விகளுடன் தாமரையே விடை: போஸ்டர்

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

திமுக காங்கிரஸை விமர்சித்து பாஜக சார்பில் ஒட்டபட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதி சாரதாமில் சாலையில் "வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா..?"என கேள்விகளுடன் " தாமரையே விடை" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுரொட்டியில் வளர்ச்சி அரசியலா..? என குறிப்பிட்டு பிரதமர் மோடியின் புகைப்படமும், வாரிசு அரசியலா எனக் குறிப்பிட்டு நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினர்களான இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திமுகவில் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர்களான மு.க.ஸ்டாலின்,கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் மற்றும் திமுக கட்சியின் உதயசூரியன் ஆகிய சின்னங்களை மறுப்பது போலும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தின் கீழ் "தாமரையே விடை" என்ற வாசகங்களுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

Tags

Next Story