அரசு அலுவலகமா, கல்யாண மண்டபமா? -அதிகாரிகளிடம் கலெக்டர் கேள்வி
ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாசில்தார் அலுவலகம் கீழ் தளத்தில், கடந்த, 2016 ம் ஆண்டு ஆவடி சட்டசபை தொகுதியில் பயன்படுத்திய மின்னணு இயந்திரங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக, அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்கள் வைத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் திடீரென திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் வைத்த அறையை திறந்து பார்வையிட்டார். மின் மின்னணு இயந்திரங்கள் எண்ணி சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர் முதல் தளத்தில் இயங்கி வந்த தாசில்தார் அலுவலகம், தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது முக்கிய அரசு ஆவணங் கள் அனைத்தும் தரையில் வைக்கப்பட்டிருந்தது.. மேலும் பல ஆவணங்கள் குப்பையாக கிடந்ததும் பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்,அரசு ஆவணங்கள் தரையில் வைக்கலாமா, பாதுகாப்பான இடத்தில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டாமா, தாசில்தார் அலுவலகத்தில் இடமா இல்லையா. இது அரசு அலுவலகமா, கல்யாண மண்டபமா என அங்கு பணிபுரியும் துறை அலுவலர்களை கண்டித்தார். தொடர்ந்து மகளிர் உரிமை தொகை பிரிவு, தேர்தல் பிரிவு, நிலஅளவை பிரிவு போன்ற இடங்களுக்கு சென்று கலெக்டர் ஆய்வு நடத்தி, தற்போதைய நிலை குறித்து அலுவலர்கள் மற்றும் தாசில்தாரிடம் கேட்டறிந்தார். பின் தாசில்தாரிடம் அரசு அலுவலகத்தில், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும், அரசு நலதிட்ட உதவிகள் கேட்டு வரும் பயனாளி களிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும். சான்றுகள், பட்டா கோரி விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாலதி, திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, தாசில்தார்கள் மதன், சோமசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.