அமைச்சர் பதவி விலக தயாரா? கோஷமிட்ட விவசாயிகள்
மேல்மா சிப்காட் விவகாரம் தொடர்பாக, அமைச்சர் வேலு பதவி விலக தயாரா? எனக் கேட்டு விளைநிலங்களில் இறங்கி செய்யாறு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர் எ. வ. வேலு பதவி விலக தயாரா? குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான வர்கள் அனைவரும் நிலம் உள்ளவர்கள் என்று நிரூபித்தால் என விவசாயிகள் விளை நிலங்களில் நின்று கோஷம்.
மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 220 நாட்களுக்கு மேலாக மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளை சிறையில் அடைத்தும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைத்தும் தொடர்ந்து போராடிய விவசாயிகளின் மீது அவதூறு பரப்பி வருவதாக அமைச்சர் வேலு அத்தோடில்லாமல் யாரிடமும் ஒரு செண்ட் நிலம் கூட இல்லை என்றும் வேண்டுமானால் முகவரியை தரத்தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.கைதான அனைவரும் விவசாய நிலம் உள்ளவர்கள் தான் என்பதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாரா என விவசாயிகள் கேள்வி எழுப்பினர் அமைச்சரின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.