பேராவூரணி அருகே இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி

பேராவூரணி அருகே இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி
கிராஅத் போட்டி
பேராவூரணி அருகே உடையநாட்டில் நடைபெற்ற கிராஅத் போட்டி மற்றும் இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராவூரணி வட்டார ஜமாஅத்துல் உலமாசபை சார்பில் கிராஅத் போட்டி மற்றும் இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி உடையநாட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பேராவூரணி வட்டார மக்தப் மதரஸா மாணவ, மாணவியருக்கான கிராஅத் போட்டி நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பகாவுதீன் உலவி சித்தீகி தலைமை வகித்தார்.உடையநாடு ஜமாஅத் தலைவர் ஜமால்முகைதீன் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .பேராவூரணி வட்டார செயலாளர் சேக் அப்துல்லா ஃபைஜி வரவேற்றார்,

இரண்டு சுற்றுக்களாக நடைபெற்ற கிராஅத் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர் .போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் ஹாஜாமுகைதீன் மிஸ்பாஹி,மெளலவி அபுபக்கர் உஸ்மானி ஆகியோர் மார்க்க சிறப்புரையாற்றினர். பொருளாளர் நெய்னா முகம்மது மன்பஈ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராவூரணி, உடையநாடு, முடச்சிக்காடு, சம்பைப்பட்டினம், செந்தலைவயல், மரக்காவலசை உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள், இஸ்லாமிய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .

Tags

Next Story