சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்

சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்

சான்றிதழ்களுடன் அதிகாரிகள் 

காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச் சான்றுதழ்களை வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளுவப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்றத்தூர் கலப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு மையங்கள் எரிவாயு, மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் இணைப்புகள் மற்றும் சுவர்கள் வண்ணம் பூசப்பட்ட நிலையில் உள் காற்று வெளியில் செல்லும் வகையில் வெளியேற்றும் விசிறி அமைக்கப்பட்டிருத்தல் போன்ற 25 பொதுவான நடைமுறைகளை பூர்த்தி செய்து ஐந்து நட்சத்திரம் (Five Star) குறியீடு பெற்றதால் ISO 9001 : 2015 தரச்சான்றிதழ் 3 சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டது.

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்றுதழ்களை வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். தற்போது தமிழக முழுவதும் அனைத்து சத்துணவு மையங்களிலும் தற்போது இது போன்ற நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story