தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோவின் கண்காட்சி

தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோவின் கண்காட்சி

தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் தலைமையில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி நடந்தது.

தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் தலைமையில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி நடந்தது.

விருதுநகரில் தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இஸ்ரோவின் "ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்" கண்காட்சியை இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தொடர்ந்து விண்வெளியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இஸ்ரோவின் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் விண்வெளிப் பணிகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதற்கு விண்வெளி அறிவியல் துறையில் உற்சாகமான மற்றும் பலனளிக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு "ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்" என்ற பேருந்தை வடிவமைத்து அதில் இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைகோள்களின் மாதிரிகள் வைத்து அதன் செயல்விளக்கம் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

நாளொன்றுக்கு 2500 மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிடலாம் என்றும் இந்தியாவில் 5 கண்காட்சி பேருந்துகள் மட்டுமே உள்ளது என்றும் தென்னிந்தியாவில் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் தமிழகத்தில் முதல்முறையாக அரசுப்பள்ளி மாணவர்கள் பார்வையிடுவது இதுவே முதல்முறை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஸ்ரீசத்யசாய் வித்யாவாசினி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story