கோவில்பட்டியில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

கோவில்பட்டியில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

சான்று வழங்கப்பட்டது

கோவில்பட்டி சொர்ணா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் சொர்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ஆட்டோமொபைல், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு,

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டு அதில் 29 மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பயிற்சி நிறுவன தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார்.

பயிற்சி நிறுவன முதல்வர் சாந்தி பிரியா,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிற்பயிற்சி ஆசிரியர் அமல்ராஜ் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 மாணவர்களுக்கு பணி நியமனஆணைகளை வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் தொழில் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story