மாற்றுத்திறனாளிகளுக்கு 12டி படிவம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு 12டி படிவம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளள் தபால் வாக்களிக்க ஏதுவாக 12 டி படிவத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி வழங்கினார்.


மாற்றுத்திறனாளிகளள் தபால் வாக்களிக்க ஏதுவாக 12 டி படிவத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏதுவாக 12 டி படிவத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி வழங்கினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் தேர்தல் ஆணையம் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கி உள்ளது, அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையில் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு 12 டி -படிவத்தை வழங்கி வருகிறார், என் நிலையில் மார்ச் 22ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வரகூர் ஊராட்சியில் வசிக்கும் நடக்க இயலாத மாற்றுதிறனாளிகளுக்கு வீட்டில் இருந்து தபால் வாக்களிக்க ஏதுவாக 12-டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பொம்மி வழங்கினார்.இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story