ஊத்தங்கரை அருகே காப்பீடு அடையாள அட்டை வழங்கல்
காப்பீடு அட்டை வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொம்மம்பட்டு கிராமப் பகுதியில் ஆயுஷ்மான் பாரத் மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சி மண்டல பொதுச் செயலாளர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருகை புரிந்த மருத்துவ காப்பீட்டு விழா குழு தலைவர் தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் கொம்மம்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் சம்பவப் பகுதியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் Bjp வடக்கு மண்டல தலைவர் சிங்காரவேல், மாவட்ட செயலாளர் கலைவாணன் ஊராட்சி மேம்பாட்டு தலைவர் செந்தில் குமார் தங்கம் மாவட்டத் துணைத் தலைவர் சென்ன கிருஷ்ணன் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்