நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்
நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 207 பயனாளிகளுக்கு ரூபாய் 79.16 லட்சம் மதிப்பீட்டில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது
பொன்னமராவதி அருகே மேல தானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டிஆர்ஓ செல்வி தலைமை வகித்தார். அறந்தாங்கி சரக துணை பதிவாளர் ஆறுமுகப்பெருமாள் முன்னிலை வகித்தார். அமைச்சர் ரகுபதி நகை கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி பேசுகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொன்னமராவதி, திருக்களம்பூர், நல்லூர், மேல தானியம், அரசமலை, அம்மன் குறிச்சி, ஆலவயல் என மொத்தம் 207 பயனாளிகளுக்கு ரூபாய் 79.16 லட்சம் மதிப்பீட்டில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களை வழங்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில் பொன்னமராவதி கள அலுவலர் அன்னலட்சுமி, பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ஷியாமளா, தாசில்தார் சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story