பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்கள் வழங்கல்

பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்கள் வழங்கல்

தரச்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மூன்று பள்ளி சத்துணவு மையங்களுக்கு பெறப்பட்ட ISO தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மூன்று பள்ளி சத்துணவு மையங்களுக்கு பெறப்பட்ட ISO தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-20-ம் ஆண்டிற்கு ISO 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக 3 பள்ளி சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அனுப்பன்குளம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 சத்துணவு மையங்களுக்கும் ISO 9001-2015 தரச்சான்றிதழ்கள் (குவெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட்) M/s. Quest Certification (P)Ltd., சென்னை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001-2015 தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், சத்துணவு மைய அமைப்பாளர்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story