கள்ளக்குறிச்சியில் இரண்டு பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
பணி நியமன ஆணைகள் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்து பொதுமக்களிடம் இருந்து 511 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியின் போது உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, சமூக நல அலுவலர் தீபிகா, மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.