பழங்குடியினருக்கு விலையில்லா கறவைமாடுகள் வாங்க காசோலை வழங்கல்

பழங்குடியினருக்கு விலையில்லா கறவைமாடுகள் வாங்க காசோலை வழங்கல்
X

காசோலை வழங்கல்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்கொளத்தூரில் கால்நடை மருத்துவ முகாமில் 100% மானியத்தில் தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.32,௦௦௦ ஆயிரம் மதிப்பீட்டில் 18 பழங்குடியினர் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான காசோலையை எம்எல்ஏ வழங்கினார்.

தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்,திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புரிசை கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கீழ்கொளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழ் கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராமன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி நிகழ்ச்சியில் பங்கேற்று கால்நடை துறை மூலம் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமின் மூலம் தற்காலிக மலட்டுத் தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை சுண்டுவாத அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் போன்ற பணிகளை கால்நடை துறை செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

பின்னர் சிறந்த கிடேரி கண்றுகளுக்கு பரிசுகளை எம்எல்ஏ ஒ. ஜோதி கால்நடை மற்றும் கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தி முகாமில் பழங்குடியினர் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு வழங்கும் 100% மானியத்தில் தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.32,000/-ஆயிரம் மதிப்பீட்டில் 18 பழங்குடியினர் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான காசோலையை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திராவிட முருகன் உதவி கால்நடை மருத்துவர்கள், லோகநாதன், வெங்கட்ராமன், மணிமாறன் கௌரி பிரியா கார்த்தி ஏழுமலை தாரணி, பரணி ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story