பல்லடத்தில் சுய உதவிக் குழுவிற்கு நலத்திட்ட உதவிக்கான காசோலை வழங்கல்

பல்லடத்தில் சுய உதவிக் குழுவிற்கு  நலத்திட்ட உதவிக்கான காசோலை வழங்கல்
X


திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில்

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்கள்.

உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, திருப்பூர் சார் ஆட்சியர் செளம்யா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, திட்ட இயக்குநர் வரலட்சுமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.

Next Story