சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

சிறப்பு முகாமில் விண்ணப்பித்த திருநங்கைகளில் 7 பேருக்கு உடனடி தீர்வாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அடையாள அட்டைகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உதவிடும் பொருட்டு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளு டன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை யில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற் றினை விடுபட்டவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறப்பு முகாமில் புதிய திருநங்கை அடையாள அட்டை வேண்டி 14 பேர், ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய 16 பேர், புதிய வாக்காளர் அட்டைக்கு 10 பேர், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய 12 பேர், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் புதியதாக பேர் என மொத்தம் 60 திருநங் கைகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் உடனடி தீர்வாக 7 திருநங்கைக ளுக்கு அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி) மணிஷ் மாவட்ட சமூக நல அலுவலர் சண்மு கவடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story