வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி

வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி
X

வாக்குச்சாவடி சீட்டு 

வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியை கலெக்டர் துவக்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் 19ம் தேதி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டூர்ணிமடம், 84வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ள பரமேஷ்வரன் தெருவைச்சார்ந்த வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், வாக்குச்சாடி சீட்டினை வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், கிராமநிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story