பெண் பயணி மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம் - டீக்கடைக்கு சீல்

பெண் பயணி மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம் - டீக்கடைக்கு சீல்
திருப்பூர் பழைய பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடையின் முன் அமர்ந்ததற்காக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு உதவி ஆணையர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் என்ற பெயரில் உள்ள பேக்கரி முன்பாக அமர்ந்திருந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஏற்கனவே கடையின் வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடையின் வழித்தடத்தில் அமர்ந்திருந்ததாக குற்றம் சாட்டி அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அவமரியாதையாக பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags

Next Story