இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்
 சிவகாசி மாநகராட்சியில் 263 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை கலெக்டர் ஜெய்சீலன் வழங்கினார்.
சிவகாசி மாநகராட்சியில் 263 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை கலெக்டர் ஜெய்சீலன் வழங்கினார்.

சிவகாசி மாநகராட்சியில் 263 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் ஜெய்சீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் கண்ணகி காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை மனு குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சொந்த வீடு வேறு எங்கும் இல்லை என்றும் குழந்தைகள் மற்றும் பிள்ளைகள் சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருவதாகவும் இதே பகுதியிலேயே வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 263 நபர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு 263 நபர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா,துணை மேயர் விக்னேஷ்பிரியா,ஆர்டிஓ விஸ்வநாதன்,தாசில்தார் வடிவேல்,மாநகராட்சி கவுன்சிலர்கள்,அதிகாரிகள் பொதுமக்கள்,கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story