கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ஆய்வு செய்த ஈஸ்வரன் எம்எல்ஏ

கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ஆய்வு செய்த ஈஸ்வரன் எம்எல்ஏ

ஆய்வு செய்த எம்எல்ஏ

எடப்பாடியில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 523 ஊரக கூட்டு குடிநீர் திட்டம் எடப்பாடியில் நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகால திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துக்கூறி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்று எடப்பாடியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 523 ஊரக கூட்டுக்குடிநீர் திட்டத்தினை ஆய்வு செய்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி அளித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர், மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராசிகள், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை,

புதுச்சத்திரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள மொத்தம் 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் (1105 கோடி) ஆயிரத்து நூற்று ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்தப் பணிகளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மற்றொரு புதிய கூட்டுக்குடி நீர் திட்டமாக ராசிபுரம் நகராட்சி,

எட்டு பேரூராட்சிகள், நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் 1105 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் இப்பணிகள் முடிவுற்று டிசம்பர் மாதத்திற்குள் நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை பகுதிகளைகளுக்கும் காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றும், கடந்த 3 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துக்கூறி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்து பேட்டியளித்தார்.

அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் எடப்பாடி மாது, ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்

Tags

Next Story