சாலை குண்டும் குழியுமாகவும் சாலை ஓரங்களில் மணல் குவிந்துள்ளதாலும் ஒரு உயிர் போன பரிதாபம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகன விபத்து. சாலை குண்டும் குழியுமாகவும் சாலை ஓரங்களில் மணல் குவிந்துள்ளதாலும் ஒருவர் பலி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்வேணி வயது ( 40 ) இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கார்பட்டியை சேர்ந்த முருகன் வயது 55 இருவரும் கட்டுமான வேலைக்காக இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி மடவார் வளாகம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே திசையில் பின்னோக்கி வந்த ராஜபாளையம் தனியார் கல்லூரியை சேர்ந்த வேன் மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த போது இருசக்கர வாகனத்தையும் அதற்கு முன்னாள் சென்ற வாகனத்தையும் முந்த முயன்றதாகவும் இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முருகன் சாலை சேதம் மணல் குவியல் காரணமாக நிலை தடுமாறி வேனின் இடது பக்கம் மீது மோதியதில் முருகன்,பொன்வேணி இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பொன்வேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முருகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்வேணியின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வேன் ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் வயது 65 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகவும் சாலை ஓரங்களில் மணல் குவியலாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து செல்வதாகவும் நிலை தடுமாறி கீழே விழுவதில் அதிகப்படியான உயிர் சேதம் தொடர்ந்து ஏற்படுவதாகவும் வாகன ஒட்டிகள் விடியா திமுக ஆட்சியை குறை கூறுகின்றனர். உடனடியாக நெடுஞ்சாலை துறையினரும்,மாவட்ட நிர்வாகம் கவனம் கொண்டு சேதம் அடைந்து இருக்கும் சாலைகளை புதுப்பிக்க வேண்டும் சாலை ஓரங்களில் இருக்கும் மண் குவியல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story