பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊனமுற்றவர்கள் உள்ளே செல்ல முடியாத அவலம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊனமுற்றவர்கள் உள்ளே செல்ல முடியாத அவலம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊனமுற்றவர்கள் உள்ளே செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கேயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினசரி ஏராளமான பத்திர பதிவுகள் நடைபெற்று வருவது வழக்கம். தற்போது பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து டெண்டரும் விடப்பட்டுள்ளது அதனால் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்க உள்ளதால் திருப்பூர் சாலையில் தனியார் இடத்தில் தற்காலிக பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஊனமுற்றவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் செல்ல எவ்வித வசதிகளும் செய்யவில்லை. ஆனால் ஊனமுற்றோர்களை அழைத்துச் செல்ல வைத்திருக்கும் மூன்று சக்கர வாகனம் பயன்பாடு இல்லாமல் ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்வுதளங்களும் அமைக்காமல் படிக்கட்டுக்கள் மட்டுமே உள்ளது இதனால் நடக்கமுடியாதவர்களை தூக்கிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

5 வருடத்தில் 1 முறை நடைபெறும் தேர்தலில் அன்று கூடு சாய்வு தளம் அமைத்து வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு பொதுமக்கள் பல லட்சம் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ வருபவர்களுக்கு உரிய வசதிகள் செய்வதில்லை. மேலும் போதிய வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு அலுவலர் பயிற்சிக்கு சென்றுள்ளதால் கடந்த 5 நாட்களில் 5 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு பணி அமர்த்தப்படும் முறையாக பத்திரப்பதிவு பணி நடைபெறவில்லை. இதனால் அரசு பலலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கேயம் பத்திரப்பதிவு அலுவலகம் ஆனது புரோக்கர்களின் பிடியில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story