பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்

பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்

 பூங்காக்கள் பாழாகும் அவலம்

பல லட்சம் செலவில் உருவான பூங்காக்கள் பாழாகும் அவலம்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீடில் கட்டப்பட்ட 23 பூங்காக்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து, 2021ல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 7.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதன்பின் கண்டுகொள்ளவில்லை. இதனால், சிறுவர்கள் பூங்கா 'விஷ ஜந்துக்களின் பூங்கா'வாக மாறியுள்ளது. பாலகிருஷ்ணா நகர் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு, சுந்தர சோழபுரத்தில் பாலகிருஷ்ணா நகர் பூங்கா உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதி 2017- - 18ன் கீழ், 47 லட்சம் மதிப்பீடில் கட்டப்பட்டு, கடந்த 2019ல் திறக்கப்பட்டது. நடைப்பயிற்சி பாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் காவலாளி அறையுடன் கட்டப்பட்ட இந்த பூங்கா, தற்போது கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. திறக்கப்பட்ட சில நாட்களில், பூங்காவில் இருந்த மின் விளக்குகளும் 'அவுட்' ஆகின. தற்போது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story