பாஜகவில் முழுநேர பணியாளர்களுக்கு பைக் வழங்கி அசத்தல்

பாஜகவில் முழுநேர பணியாளர்களுக்கு பைக் வழங்கி அசத்தல்
X

புதிய பைக்குடன் முழுநேர பணியாளர்கள்

நம்மக்கில் பாஜகவில் முழு நேரப் பணியாளர்களுக்கு பைக் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் முழு நேரமும் கட்சி பணியாற்றும் 11 பேருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதிய ஹீரோ HF டீலக்ஸ் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது . முறைப்படி அவர்களின் பேரில் நாமக்கல் வட்டார போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் வழங்கும் நிகழ்வு நாமக்கல் , மாவட்ட தலைமை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவரும் நாமக்கல் பாராளுமன்ற அமைப்பாளருமான என்.பி.சத்தியமூர்த்தி, சேலம் பாராளுமன்ற முழுநேர பணியாளர் திருவேங்கடம், நாமக்கல் பாராளுமன்ற முழு நேர பணியாளர் நகுலன், மற்றும் சேலம் பாராளுமன்ற பால.மகாதேவன் அவர்கள் உள்ளிட்ட சட்டமன்ற முழு நேர ஊழியர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story