மத்திய அரசு உறுதுணையாக இருப்பது அவசியம் !

மத்திய அரசு உறுதுணையாக இருப்பது அவசியம் !

மத்திய அரசு உறுதுணையாக இருப்பது அவசியம் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா் தெரிவித்தார். 

மத்திய அரசு உறுதுணையாக இருப்பது அவசியம் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா் தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்புகள் தொடா்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா்.கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், தமிழக அரசு விரைவாக செயல்பட்டு பாதிப்புகளை கண்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு தமிழக அரசு மீது தொடா்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. உரிய நிவாரண உதவிகளையும் வழங்க மறுக்கிறது. பொங்கல் திருநாள் விரைவில் வர இருக்கின்ற நிலையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாஜகவிற்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் முஸ்லிம் லீக் வழங்கும். அதிமுக, பாஜக பிரிவு வெறும் நாடகம். சிறுபான்மையின மக்கள் இதை நம்ப மாட்டாா்கள். முஸ்லிம் லீக் சாா்பில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் மண்டல பயிலரங்கு மாநாடு ஜனவரி 10 முதல் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

Tags

Next Story