குமரி 4 வழிப் பாதையில் 60 பாலங்கள் அமைப்பதாக தகவல்

பாலப்பணிகள்
இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் நான்கு வழிச்சாலை பணிகள் முக்கிய கருப்பொருளாக இடம் பெற்று இருந்தது.
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளை பொறுத்தவரை பசுமை தீர்ப்பாய வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள் என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை தாண்டி தான் நடைபெற்று வருகிறது. இதனால் பாதியில் நின்ற நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கின. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காரோடு – கன்னியாகுமரி இடையே ஆங்காங்கே 24 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைப்பதுடன், 35 குளங்கள் உள்பட சிறிய மற்றும் பெரியது என 60 பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.
