மாங்காடில் நுாலகம் மூடியே கிடக்கும் அவலம்

மாங்காடில் நுாலகம் மூடியே கிடக்கும் அவலம்

மூடிக்கிடக்கும் நூலகம்

மாங்காடில் நுாலகம் மூடியே கிடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாங்காடு நகராட்சி அமைந்துள்ளது. இங்கு 60,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குன்றத்துார்- குமணன்சாவடி நெடுஞ்சாலையில், மாங்காடில் அரசு கிளை நுாலகம் அமைந்துள்ளது.

இங்கு, தினமும் 200க்கும் மேற்பட்டோர் தினசரி நாளிதழ், நுாலக புத்தகங்களை படித்து பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த நுாலக கட்டட சுவர் மற்றும் மேற்கூரை சேதமாகி மோசமான நிலையில் உள்ளது. மழை காலத்தில் புத்தகங்கள் நனைந்து வீணாகிறது. மேலும், இந்த நுாலகம் தினமும் திறக்கப்படுவதே இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நுாலகர் கணேஷ் கூறுகையில், ''மாங்காடு நுாலகத்திற் தனியாக நுாலகர் இல்லை. அனகாபுத்துார் நுாலகரான நான் மாங்காடு நுாலகத்தை கூடுதலாக சேர்ந்து பார்த்து வருகிறேன். 15 நாட்களுக்கு ஒரு முறை நுாலகத்திற்கு செல்கிறேன்.

''தினக்கூலி பணியாளர் மூலம் நுாலகம் திறக்கப்படுகிறது. புதிய நுாலகம் கட்டடம் கட்ட நகராட்சி நிர்வாகத்தினர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்,'' என்றார்."

Tags

Next Story