அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு : 2 சூட்கேஸ்கள்..!
ஆவணங்களை எடுத்து செல்லும் அதிகாரிகள்
திருவண்ணாமலை: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.3) காலை முதல் தொடர்ந்து 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்களில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, கல்வி அறக்கட்டளை என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை.திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் இரண்டு சூட்கேஸ்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து பாதுகாப்பு படை வீரர்களின் துணையுடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் சென்றனர். இந்த இரண்டு சூட்கேஸ்கள் யாரிடம் இருந்து எடுக்கப்பட்டது.
இதில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை. இரண்டு சூட்கேஸ்களில் பணம் எடுத்துச் சென்று மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் வங்கியில் செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.