அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
ஆட்சியர் லட்சுமிபதி
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 07.06.2024 வரை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளதால் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்;கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்;, பாஸ்போட் சைஸ் போட்டாே, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்நிலையத்தில் உள்ள கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. மின்சாரப்பணியாளர் - 2 ஆண்டுகள் 2. பொருத்துநர் - 2 ஆண்டுகள் 3. கம்பியாள் - 2 ஆண்டுகள் 4. பற்ற வைப்பவர் - 1 ஆண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப (Industry 4.0) புதிய தொழிற்பிரிவுகள்: 1. உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் Amp ஆட்டோமேஷன் - 1 ஆண்டு 2. தொழில்முறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி - 1 ஆண்டு 3. மேம்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் - 2 ஆண்டுகள்
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை, விலையில்லா காலணி, பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை 9499055816 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.