ஐடிஐ மாணவர் சேர்க்கை ஜூன்13 வரை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்!

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஜூன்13 வரை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்!

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2024 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி, கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம், வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற் பிரிவுகள் விவரம் மேற்குறித்த இணையதளமுகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story