ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்தக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது 01.04. 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர் களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் மேலும் அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் மேலும் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் பல்வேறு அரசு துறை களிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300 க்கு மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீரென்று தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டவர் களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story