மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது

மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது

ஆர்ப்பாட்டம் 

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு எதிராக கன்னட கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் துறை சார்ந்த அரசு ஊழியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளாக சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு தடை ஆணையை நீக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடை கலைத்தல் வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினால் அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags

Next Story