ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சேலம் கோட்டை மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

. தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர் முதுகலை ஆசிரியர் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

-காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் வெ.அர்த்தநாரி தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகி அன்பழகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் திருமுருகன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜான், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட துணை தலைவர் மாயகிருஷ்ணன், ஜாக்டோ ஜியோ நிர்வாகி சந்திரசேகர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் எஸ். கணேசன் உள்ளிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முன்னுருக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story