ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

சாலை மறியல் 

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றக்கோரி 2 வது கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

Tags

Next Story